குமரிமாவட்ட சி.ஐ.டி.யு., மற்றும் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் பொதுக்கூட்டம் நாகர்கோவில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பனிரெண்டு மணி நேரம் வேலை திட்டத்தை திரும்ப பெற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உழைப்பாளர்கள் தினம் ஆன மே தினத்தை.குமரிமாவட்ட சி.ஐ.டி.யு., மற்றும் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் எதிரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு.சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் அந்தோனி தலைமை தாங்கினார். இந்திரா, காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மே தின கூட்டத்தில் உரையாற்றிய அனைவருமே தொழிலாளிகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன்.நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தின் கடைசி தினத்தில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானமான.தொழிலாளர்களின் 12 மணி நேர திட்டத்தை தி மு க கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்து கண்டனம் தெரிவித்த நிலையில்.உலக தொழிலாளர்கள் தினத்தன்று.மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியிலே. தொழிலாளர்கள் உணர்வை மதித்து.12 மணி நேர வேலை மசோதா வாபஸ் என அறிவித்த தமிழக முதல்வருக்கு பேச்சாளர்கள் அனைவருமே நன்றி தெரிவித்தனர். பொதுக்குட்டத்திற்கு முன்னதாக மே தின விழா பேரணி நடைபெற்றது.கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் இருந்து தொடங்கி, வடசேரி பொதுக்கூட்டம் திடல் வரை பேரணி நடைபெற்றது. மழை பெய்த போதும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தொழிற்சங்க உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று மே தின விழாவை உணர்வு பூர்வமாக கொண்டாடியதை காண முடிந்தது.