நில எடுப்புச் சட்டத்தின்படி மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை விமான நிலைய உருவாக்கத்திற்கு விரிவாக்கத்திற்கும் இடம் கொடுத்த சின்ன உடைப்பு கிராம மக்களுக்கு சட்டப்படி நிவாரண வழங்க கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தில் பட்டியில் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 350 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்போதைய ஆங்கில அரசு இவர்களுக்கு உகந்தமான சுமார் 100 ஏக்கர் விலை நிலத்தை மதுரையில் விமான நிலையம் அமைப்பதற்காக 1921 ஆம் ஆண்டு கையகப்படுத்தினார்கள். அதன் பின்பு வந்த அரசுகள் விமான நிலையம் மற்றும் சாலை விரிவாக்கத்திற்காக 1944, 1975, 2000 தற்போது 2009 ஆம் ஆண்டின் அறிவிப்பு செய்து நஞ்சை புஞ்சை நிலங்கள்,
வீடு, அடுக்குமாடி வீடுகள் என்று சுமார் 250 வீடுகளையும் சுமார் 200 ஏக்கர் விலைகளையும் கையகப்படுத்தி இவர்களுக்கான கிராம கோயில்களும் மயானமும் பறிபோனது உச்சகட்டமாக இவர்கள் இழந்த நிலங்கள் போக மீதமுள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்த சுமார் 87 ஏக்கர் பரப்பளவை கொண்டு சென்னை விடுப்பு பெரிய கண்மாய் ஒட்டுமொத்த நிலை எடுப்பார் வழிபட உள்ள நிலையில் அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு 2013ல் நிலை எடுப்பு சட்டத்தின் படி உரிமைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட வேண்டும்.
2013 ஆம் ஆண்டின் புதிய சட்டத்தின் படி வரும் இழப்பீடு மற்றும் குடி அமர்வு போன்ற சட்டப்படியான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று உள்ளதால் அதன்படி எங்களுக்கு 2013 ஆம் ஆண்டு சட்டப்படி நிவாரண வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சின்ன உடைப்பு மக்களுக்கு பாதை வசதியுடன் பட்டா வழங்கி வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
நிலத்தை எங்களுக்கு அருகில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை புதிய சட்டப்படி கையகப்படுத்தி அதை எங்கள் அனைவருக்கும் தலா 2.50 ஏக்கர் அல்லது அதற்கு குறைவாக எடுக்கப்பட்ட நிலம் சட்டப்படி வழங்கப்பட வேண்டும்.
நிலம், வீடுகள் வழங்கிய எங்களுக்கு சட்டத்தின் படி எங்களின் கல்வி தகுதிக் கற்ப மத்திய, மாநில அரசுகளில் வேலைகள் வழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட நிவாரணத்தை வழங்காமல் மாவட்ட நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் எங்களுக்கு வீடுகளை எடுக்கவோ விளை நிலங்களை கையகப்படுத்தகூடாது.
பழக்கப்பட்ட இடத்தில் மத்திய மாநில அரசுகளின் வீடு கட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுத்து பள்ளிக்கூடம் விளையாட்டு மைதானம் நூலகம் கலையரங்கம் ரோடு குடிநீர் மின்சாரம் கோவில் மற்றும் மயானம் போன்ற அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவர் முருகவேல் ராஜன் தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் அதன் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், மதுரை தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் இன்குலாப் அவர்கள், தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக பேரறிவாளன், நூறாவது வார்டு மாமர உறுப்பினர் முத்துலட்சுமி ஐயனார், பனை. ராஜ்குமார் மற்றும் 500 க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.