• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மெதுவாக இயக்கப்பட்ட ரயில்கள்

ByKalamegam Viswanathan

Dec 18, 2024

மின்மாற்றியில் ஏற்றப்பட்ட தீ விபத்தால், ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது.

மதுரை கூடல் நகர் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் உள்ள மின் மாற்றியில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மின்மாற்றி ஏற்பட்ட தீயானது தொடர்ந்து எரிந்ததால் அப்பகுதியில் கடந்து செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்த செல்லும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக அவ்வழியாக சென்ற ரயில்கள் தொடர்ந்து வேகத்தை குறைத்து கடந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது.

அரை மணி நேரத்துக்கு மேலாக மின் இணைப்பில் கம்பியும் தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு பகுதி பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.