• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் வாகன பழுது நீக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.!

ByK Kaliraj

Jun 12, 2026

சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நிறுவனம் முழுவதும் தீ பரவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தீப்பற்றி கொழுந்து விட்டு எறிந்தது. சம்பவம் அறிந்த சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் தீ விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜீப் உள்ளிட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.