• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி திருவிழா..,

ByP.Thangapandi

Feb 15, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில் அமைந்துள்ளது.,

இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.,

இந்நிலையில் இன்று உசிலம்பட்டி சின்ன கருப்பு கோவிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாப்பாபட்டியில் உள்ள ஒச்ச்சாண்டம்மன் கோவிலுக்கு மாசி பெட்டி எடுக்கும் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று மாசி பெட்டியினை வணங்கி வழி அனுப்பி வைத்தனர்.,

இந்நிலையில் பூசாரிகள் பெட்டியினை தலையில் சுமந்து நடை பயணமாக ஒச்சாண்டம்மன் கோவில் சென்று இரவு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் உசிலம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் சேர்ந்த மக்கள், மதுரை, தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.,

மேலும் உசிலம்பட்டி பகுதியை சுற்றியுள்ள வாலாந்தூர், கருமாத்தூர், நாட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகள் குலதெய்வ வழிபாட்டுக்கு ஏராளமான மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.,