• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

வேன் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உள்பட மூன்று பேர் பலி..,

ByP.Thangapandi

Feb 15, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரைச் சேர்ந்தவர் ராஜகுரு., கட்டிட தொழிலாளியான இருவரது அண்ணன் ராஜ்குமார் மகள் பிரமிலா – வை குடும்ப சூழல் காரணமாக ராஜகுரு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.,

7 வயதான பிரமிலா விற்கு நேற்று நள்ளிரவு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் தனது இருசக்கர வாகனத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுடன் அண்ணன் மகள் பிரமிலாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.,

சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து கோவிலாங்குளம் நோக்கி சென்ற வேன் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.,

இதில் ராஜகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 7 வயது சிறுமி பிரமிலா, சங்கீதா இருவரும் படுகாயமடைந்த நிலையில்., அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.,

தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த ராஜகுரு உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநர் குறவடியைச் சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பிரமிலா மற்றும் சங்கீதா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்., இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியான சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,