சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச கூடிய ஒரு அதிமுகவை பார்க்க முடியவில்லை என்றும் மக்கள் பிரச்சனைகளை பாஜக தான் தைரியமாக பேசி வருவதாக பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் லாவண்யா மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் திமுக ஆட்சி காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது, ஆனால் இந்த 4 ஆண்டு காலம் அவர்கள் ஆட்சி நீடிக்குமா என்று உறுதியாக கூற முடியாது, இந்த ஆட்சிக்கு பின்னர் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ அதே எழுச்சி தற்போது அண்ணாமலையை தலைவராக உள்ள இந்த நேரத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தின் எதிர்கட்சி போல மக்கள் பிரச்சனைகளை பாஜக தான் பேசி வருகிறது.
சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக ஆண்மையோடு பேச கூடிய ஒரு அதிமுகவை பார்க்க முடியவில்லை, எதிர்கட்சியாக இல்லாமல் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே. மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டு தவறுகளை இழைத்த காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாமல் சென்றது. பாஜக தயவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இந்த தோல்வியும் நல்லதுதான், வரும் காலங்களில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.
இது போன்று அதிமுக அசிங்கபடுவது ஒன்றும் புதிதல்ல. ஓ.பன்னீர் செல்வத்தை பார்த்து ஆடிட்டர் குருமூர்த்தி ஆண்மை இருக்கிறதா என்று ஊடகங்களின் மத்தியில் பேசியது அன்று சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அன்று அதிமுகவும் வாய் திறக்கவில்லை. இப்போது இந்த அளவுக்கு அதிமுக பாஜகவிற்கு இடம் அளித்துள்ளது. அனைத்து தரப்பிலும் பாஜக நெருக்கடி கொடுத்த போது ஓபிஎஸ் எடப்பாடியை பேசி சமரசம் செய்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலின் போது கூட எம்.ஜி.ஆரை பாஜக முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்தனர். இப்படி 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற அதிமுகவினர் உழைத்துவிட்டு, வெற்றியை பாஜக அறுவடை செய்துவிட்டனர். சட்டமன்றத்தில் கால் ஊன்ற அதிமுகவை பயன்படுத்தி கொண்டு இன்று ஆண்மை இருக்கிறதா ? இல்லையா என்று பெண்ணை கட்டி கொடுத்த மாமியார் போல பாஜக கேட்டுக்கொண்டிருக்க அதிமுக அனைத்து பலவீனத்தையும் இழந்துவிட்டது.
இப்போது அதிமுக சுதாரிக்கும் என்று எதிர்பார்க்காமல் இது அவர்களின் சொந்த கருத்து இதற்கு எல்லாம் கட்சி பொறுப்பேற்க்காது என்று ஜெயக்குமாரை விட்டு எடப்பாடி பேச விடுவார்.
இன்னும் அதிமுக என்ன என்ன சங்கடத்தை சந்திக்க போகிறதோ என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]