• Mon. May 11th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் சேகர்பாபுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை..,

குமரி மாவட்டம் அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு,
பல அடுக்கு ஊதியம் நிலை இருக்கும் நிலையில். கடைநிலை ஊழியர்கள் ஊதியம் உயர்வு குறித்து பல்லாண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில். அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கோரிக்கை குறித்து எவ்விதமான நடவடிக்கை எடுக்காத நிலையில். கடைசி ஆயுதமாக. சுசீந்திரத்தில் உள்ள, குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக அலுவலகம் முன் ஊதிய உயர்வு கோரி கோயில் பணியாளர்கள் கடந்த 24_ம்தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருக்கோவில் பணியாளர்கள் போராட்டத்திற்கு. குமரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்க பிரிவு தொடக்க நிலையிலே ஆதரவு கொடுத்து வரும் நிலையில். போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேசினார்.

கனகராஜ் தெரிவித்தவை, குமரியில் சம்பந்தப்பட்ட துறையின் தலைமை அலுவலகம் முன் கடந்த 4_நாட்களாக நீங்கள் நடத்தும் உரிமை போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் பதில் சொல்லாது மெளனம் காக்கும் நிலைக்கு, இம்மாதம் (ஏப்ரல்_30)வரை காத்திருப்போம். மே முதல் தேதி முதல் போராட்டம் வடிவத்தை மாற்றி அமைப்போம். அன்று அதிகாரிகள் மட்டுமே அல்ல அமைச்சர் சேகர் பாபுவே இங்கே வருவார் என தொரிவித்தார்.

கனகராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் போராட்டக்காரர்கள் உடன் அமர்ந்து மதிய உணவாக “கஞ்சி” குடித்தார்கள்.

திருக்கோவில் தொழிலாளிகள் போராட்டத்திற்கு முதல் நாள் முதலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு கொடுப்பது போல் ம.தி.மு.க ஆதரவு தெரிவித்து வரும் நிலையில். 4_காவது நாளில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா உட்பட அந்த அமைப்பின் பல்வேறு பொருப்பாளர்கள் போராடும் தொழிலாளர்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்கள்.

இன்று(ஏப்ரல்28) 5வது நாளாக போராட்டம் தொடர்கிறது.