


உலக தண்ணீர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள் “பனிப்பாறை பாதுகாப்பு” ஆகும்.
இந்த கருப்பொருள் பனிப்பாறைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்துகிறது மற்றும் முக்கிய நன்னீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறது.
ஆண்டுதோறும், உலக நீர் தினத்தின் கருப்பொருள்கள்:

2024 உலக நீர் தினத்தின் கருப்பொருள்: அமைதிக்கான நீர்.
2023 உலக நீர் தினத்தின் கருப்பொருள்: மாற்றத்தை துரிதப்படுத்துதல்.
2022 உலக நீர் தினத்தின் கருப்பொருள்: நிலத்தடி நீர்: கண்ணுக்குத் தெரியாததைக் காணக்கூடியதாக மாற்றுதல்.
2021 உலக நீர் தினத்தின் கருப்பொருள்: தண்ணீரை மதிப்பிடுதல்
2020 உலக நீர் தினத்தின் கருப்பொருள்: நீர் மற்றும் காலநிலை மாற்றம்
2019 உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள்: யாரையும் விட்டுவைக்காதே.
2018 உலக தண்ணீர் தினம் தீம்: தண்ணீருக்காக இயற்கை
‘நீர் இன்றி அமையாது உலகு’ என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.
இதுமட்டுமின்றி அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும்.
உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். தண்ணீர் குடிக்காமல் உங்களால் எத்தனை நாட்கள் அதிகப்பட்சமாக வாழ்ந்திட வாழ முடியும்?. ஒரு வாரம் கூட என வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மேல் நம்மால் வாழ முடியாது. எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.

