• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ByA.Tamilselvan

Nov 26, 2022

சத்தீஷ்கரில் பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஷ்கர் காட்டு பகுதிகளில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க பா துகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பொம்ரா காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் பிரிவு குழு உறுப்பினர்களாக மோகன்காடி, சுமித்ரா உள்பட 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் பொம்ரா காட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர் இன்று காலை நடந்த தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.