• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சூரியஉதயம் காண ஏராளமான சுற்றுலா பயணிகள்..,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

அதிகாலையிலேயை கன்னியாகுமரி கடற்கரைக்கு வருகை தந்து, சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். மேலும் தங்களை செல்போனில் புகைப்படம் எடுத்தும் கடலில் கால் நனைத்தும் குடும்பத்துடன் விடுமுறையை கழித்து வருகின்றனர். வழக்கத்தை விட அதிகப்படியான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்துள்ளதால் கன்னியாகுமரி கடற்கரை களைகட்டி உள்ளது.

காவல்துறை மற்றும் சுற்றுலா காவலர்கள் சுற்றுலா பயணிகள் கடலில் இருக்கும் பாறைகளில் ஏறுபவர்களை எச்சரித்த வண்ணம்,கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.