ஐதராபாத்தில் போலி ஆதார் அட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது.புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இதற்கு மூளையாக செயல்பட்ட வந்த பவன் கோட்டியா என்பவன் மத்தியப்பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அம்மாநில போலீசாரின் உதவியுடன் பவனை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.
பவனிடம் நடந்த விசாரணையில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆதார் அட்டைகளைத் தயாரித்து விநியோகித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் போலீசிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க தனது இருப்பிடத்தை மாற்றி வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
அசாமில் 2016-ம் ஆண்டுமுதல் போலி ஆதார் அட்டை வழங்கும் பவன் தன்னுடைய நண்பர் நோஹித்துடன் இணைந்து இருந்து சட்டவிரோத பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஐதராபாத்தில் போலியாக ஆதார் அட்டையை தயாரித்து தற்போது சிக்கிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி ஆதார் அட்டைகளைத் தயாரித்தவர் கைது
