• Thu. Sep 19th, 2024

தனது தந்தையின் நினைவு நாளில் ராகுல் உருக்கமான டூவிட்

ByA.Tamilselvan

May 21, 2022

முன்னாள் பிரதமர் ராஜீ்வ் காந்தியின் நினைவு நாளான இன்று “என் தந்தை மன்னிக்க கற்றுத்தந்தவர்- என ராகுல் காந்தி டுவீட் செய்துள்ளார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனக்கும், பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்ததாக அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியில் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராஜீவ் காந்தி குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்ட ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-
எனது தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது கொள்கைகள் நவீன இந்தியா வடிவமைத்தன. அவர் கருணை மிக்க மனிதர். எனக்கும், பிரியங்காவுக்கும் மன்னிப்பு மற்றும் மற்றவர் உணர்வுகளைப் புரிந்துகொள்வதன் மதிப்பைக் கற்றுக்கொடுத்தவர். நாங்கள் ஒன்றாக செலவழித்த நேரங்களை அன்புடன் நினைவுகொள்கிறேன்.இவ்வாறு டுவீட் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *