• Mon. May 6th, 2024

மந்தை அம்மன் கோவில் திருவிழா! பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்..,

ByP.Thangapandi

Apr 14, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்தில் மந்தை அம்மன் கோவில் அமைந்துள்ளது உள்ளது.

இங்கே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மந்தை அம்மன் கோவில் திருவிழா கிராம பொதுமக்கள் சார்பில் நடத்தப்படுகிறது. இதில் மூன்று நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதில் முதல் நாள் விளக்கு பூஜையும், இரண்டாம் நாள் அம்மனுக்கு கரகம் இடத்தில் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பெண்கள் மந்தை அம்மன் கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து கும்மி பாட்டு பாடல் பாடி கும்மி அடித்தனர். அதனை தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகிலுள்ள குளத்தில் கரைத்தனர். இதில் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர் இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என கிராம மக்கள் நம்பிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *