• Sun. May 19th, 2024

குமரி லெமூர் கடலில் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5பேர் உயிரிழந்தனர்

குமரி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட பகுதி. இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கடற்கரையை ஒட்டிய பகுதிகள். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதி சுற்றுலா பயணிகள் கடலில் நீராட அனுமதிக்கப்பட்ட ஒரே ஒரு பகுதி. இது போக சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளான. கோவளம் சூரிய அஸ்தமனம் பகுதி,சொத்தவிளை கடற்கரை,சங்கு துறைபீச், லைட் ஹவுஸ் முட்டம் இவைதான் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பகுதிகள் கூடும் இடங்கள்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதி நீங்கலாக எந்த கடற்கரை பகுதிகளிலும், கடலில் இறங்கி நீராடிக் கூடாது என்ற அறிவிப்பு பலகைகள் மட்டும் அல்லாது, கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களும் கடலில் இறங்கி நீராட முயல்பவர்களை எச்சரித்தாலும். சுற்றுலா வரும் சுற்றுலா பயணணிகளுக்கு கடலின் தன்மை,அலைக் கூட்டங்களின் வேகம் எதுவும் தெரியாத நிலையில். கடல் அலைகளில் சிக்கி மரணம் அடைவோர் சுற்றுலா பயணிகள் மட்டுமே அல்ல உள்ளூர் மக்களும் கடல் அலைகளில் சிக்கி மரணம் அடைவது ஒரு தொடர்கதையே.

சில ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்ட சுற்றுலா துறை தோற்றுவித்த புதிய கடற்கரை லெமூர் சுற்றுலா கடற்கரை பகுதி.

இந்த கடற்கரை பகுதி பார்வைக்கு அழகான பகுதி ஆனால் கடல் பகுகுதி ஆபத்தானது. இதனால் மாவட்ட நிர்வாகம் அந்த கடல் குறித்த எச்சரிக்கை பலகையை கண்ணில் படும் இடங்களில் வைத்திருந்தாலும். இத்தகைய எச்சரிக்கை அறிவிப்பை மதிக்காமல் பலரும் தினம் லெமூர் கடற்பரப்பில் கடல் நீராடுவதை தடுக்க முடியவில்லை.

திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயிலும் இரண்டு மாணவிகள், மாணவர்கள் மூன்று பேர் .லெமூர் கடற்பரப்பில் கடலில் இருந்து நீராடிக் கொண்டிருந்தனர். (ஏற்கனவே வானிலை அறிக்கையில் இரண்டு நாட்களுக்கு கடலில் அலையின் வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்).

இந்த நிலையில் தான் திருச்சி மருத்துவ கல்லூரி மாணவர்களான 5 பேர் கடல் அலையில் சிக்கி மரணம் அடைந்தனர். இவர்கள் நீங்கலாக மூன்று மாணவர்கள். சிகிக்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் உலா வருகிறது.

மரணம் அடைந்த மருத்துவ மாணவர்கள்

1) குமரி மை சேர்ந்த சர்வதர்ஷித்(23)

2) திண்டுக்கல்லை சேர்ந்த ப்ரவீன்(23)

3) ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ்(24)

4)நெய்வேலியைச் சேர்ந்த காயத்ரி (25)

5)தஞ்சையைச் சேர்ந்த சாருகவி(24).

மரண அடைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படை மற்றும் அந்த பகுதியில் உள்ள மீனவர்களும் இணைந்து கடல் அலைகளில் சிக்கி மரணம் அடைந்தவர்கள் உடலை மீட்டு கடற்கரை மணல் பரப்பிற்கு எடுத்து வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *