


மதுரை, திருமங்கலத்தில் அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு, திமுக தெற்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க
திமுக தெற்கு மாவட்டம் சார்பாக திருமங்கலத்தில் திமுக அலுவலகத்தில்
மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் தலைமையில் சட்ட மேதை அம்பேத்கரின்135 ஆவது பிறந்தநாள் நாளை முன்னிட்டு, திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம்,
நகரச் செயலாளர் ஸ்ரீதர்,அவைத் தலைவர் நாகராஜன் ஒன்றிய செயலாளர்கள்
ஆலம்பட்டி சண்முகம்,மதன்குமார்,ராமமூர்த்தி,ஜெயச்சந்திரன்,கீர்த்திகா தங்கப்பாண்டி, திமுக நிர்வாகிகள்.விமல்,பாச பிரபு,ஜாகீர், கவுன்சிலர்கள் சின்னச்சாமி,ஜஸ்டிமாவட்ட கவுன்சிலர் ஜெயராஜ், பொருளாளர் செல்வம்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் யசோதை சாமிநாதன்உள்ளிட்ட மதுரை தெற்கு மாவட்ட கழகத்தைச் சேர்ந்த மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் வட்ட வார்டு கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள்- பிரதிநிதிகள், இளைஞர் அணி,மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் மகளிர் அணி, விவசாய அணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட ஒன்றிய நகர பகுதி மற்றும் பேரூர் கழகங்களின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்- நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள் முன்னாள் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து
கொண்டனர்.

