• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு மணிமண்டபம்

By

Sep 2, 2021 ,

1987-ல் நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.4 கோடி செலவில் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.

“ஒடுக்கப்பட்ட சமுதாயம் எதுவாக இருந்தாலும் அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் கொள்கை. 1987-ல் நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.4 கோடி செலவில் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதி இது. யார் மறந்தாலும் நிச்சயம் நான் மறக்கவில்லை. யாரையும் மறக்க மாட்டேன். நான் சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பை சார்ந்தவன். மிகவும் பின் தங்கிய வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஒரு இடம் உண்டு. நான் முதல்- அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டு இருப்பதால் பின் தங்கிய வகுப்பினருக்காக என் உயிரையும் பணயமாக வைத்து போராடுவேன் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதல்- அமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் சொன்ன வாசகம் இது. அந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.