மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வலையபட்டியில் அமைந்துள்ளது மந்தையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிதலமடைந்து காணப்பட்ட நிலையில் கோபுரங்கள், சுவர்கள் பூரணமைப்பு செய்து சுமார் 15வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜைகள், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது தொடர்ந்து மங்கள இசை முழங்க கடம் புறப்பாடாகி மந்தையம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் ஆதிமூர்த்தி தலைமையில் புனிநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மூலஸ்தானத்தில் அம்மன் சூலாயுதம் மற்றும் பீடத்திற்கு பால்,பழம்,இளநீர் உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் நிர்வாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.