• Tue. Feb 18th, 2025

துபாயிலிருந்து கர்நாடகா வந்தவருக்கு குரங்கம்மை!

ByP.Kavitha Kumar

Jan 24, 2025

துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு வந்தவருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு பிறகு குரங்கு அம்மை என்ற நோய் உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958-ம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970-ம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தொற்று 2017-ம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்போது மீண்டும் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று பதிவாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இதற்கான கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து இந்தியாவருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தின் கார்காலாவைச் சேர்ந்தவர் ஜனவரி 17-ல் துபாயில் இருந்து மங்களூரு திரும்பியவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது ரத்த மாதிரிகளை புனேவிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.