• Mon. Apr 21st, 2025

சென்னையில் தவெக முதல் பொதுக்குழு கூட்டம்..,

Byஜெ.துரை

Mar 28, 2025

இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா பேசியதாவது,

ஹிட்லர், முசோலினி அரசியல்போல மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது. அதிமுகவினர் நேரடியாக பாஜகவுடன் கூட்டணி வைத்தனர். அதைவிட மோசமானது மறைமுக கூட்டணி.

களத்தில் போராட்டம் நடத்தவில்லை என விமர்சிக்கும் நீங்கள் என்ன போராட்டம் நடத்தியுள்ளீர்கள். கேள்வி கேட்க ஆளே இருக்கக் கூடாது என நினைக்கிறது திமுக. மீடியா முன்பும், மக்கள் முன்பும் மத்திய அரசுக்கு எதிராக போராடுவது போன்று நடிக்கிறது திமுக. போராட்டம் என்றால் என்னவென்று நாங்கள் காட்டுகிறோம். 2 மாதம் காத்திருங்கள். உண்மையான போராட்டம் என்னவென்பது குறித்து 2 மாதங்களில் விஜய் காண்பிப்பார்.

வைகோவை எப்படி காலி பண்ணினார்கள் தெரியுமா? 6 தொகுதிகளை கொடுத்துவிட்டு திமுக சின்னத்தில் நிற்க வைத்துவிட்டார்கள். இன்றைக்கு வைகோவுக்கு சட்டசபையில் உறுப்பினர்களே கிடையாது. கடைசியில் அவரது மகன் அமைச்சர் முன்னாடி கண் கலங்கி அழுகிறார். நான் சொந்த சின்னத்தில்தான் நிற்பேன் என்று. இதுதான் உங்கள் கூட்டணி முறையின் அடக்குமுறை. இதுதான் சர்வாதிகாரம். இதுதான் நாசிசம். இதுதான் ஹிட்லர்.

தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் திமுக கூட்டணி கட்சிகள் ஏன் அமைதியாக இருக்கிறது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியாக இருக்கும்போது என்படி பிஜேபி 2வது இடத்துக்கு வந்ததோ, அதேபோல பிஜேபியை வளர்ப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது என்று பேசினார்.