• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

சோரூமில் கார் திருடி சென்ற நபர் கைது..,

BySeenu

Jun 3, 2025

கோவையில் சோரூம்புக்குள் புகுந்து வாங்குவது போல் நடித்து ரூபாய் 20 லட்சம் எலக்ட்ரானிக் காரை லாவகமாக சாமி திருடி சென்றார். அவர் நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது காவல் துறையிடம் சிக்கினார்.

கோவை, சிங்காநல்லூர் திருச்சி சாலையில் தனியார் கார் ஷோரூம் உள்ளது. இந்த சோரூமில் சரவணகுமார் என்பவர் கார் டெலிவரி செய்யும் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஷோரூம் மற்றும் அதன் அருகே நிறுத்தப்பட்ட கார்களை ஆய்வு செய்தார். அதில் ஒரு கார் மாயமாக இருந்தது. உடனே அவர் அந்த சோரூமில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தார்.

அப்பொழுது ஒரு காரின் அருகே மர்ம ஆசாமி வந்து நிற்பதும், பின்னர் சிறிது நேரம் அந்த காரை சுற்றி, சுற்றி வருவதும் தொடர்ந்து அந்த ஆசாமி காரை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது. அந்த காரின் மதிப்பு ரூபாய் 20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திருட்டு குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் புகார் செய்யப்பட்டது. அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் ஆய்வாளர் தெவ்லத் நிஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனி படை போலீஸ்சார் ஷோரூம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விசாரணை நடத்தினர்.

அத்துடன் சோரூமில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர். அதில் காரை திருடி சென்றவர். அந்த சோரூம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து போலீசார் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் மோட்டார் சைக்கிளை யாராவது ? எடுக்க வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கூறினார். அதன்படி அந்த பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுக்க ஒரு நபர் வந்தார். உடனே ஊழியர்கள் அந்த நபரை பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கந்து கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த கர்ணன் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் ஷோரூம் சென்று கார் வாங்குவது போல் நடித்து ரூபாய் 20 லட்சம் எலக்ட்ரிக் காரை திருடிச் சென்ற பலே ஆசாமி அவர் தான் என்பது தெரிய வந்தது. போலீசார் கர்ணனை கைது செய்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறும்போது

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கர்ணன் கார் வாங்க அந்த சோரூபிற்க்கு சென்று எலக்ட்ரானிக் காரை பார்த்தார். பின்னர் அந்த காரை ஓட்டையும், பார்த்து விட்டு விரைவில் வாங்குவதாக கூறி உள்ளார். வாடகைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டி வரும் அவரிடம் அந்த காரை வாங்க போதிய பணம் இல்லை, எனவே அந்த காரை திருட முடிவு செய்தார். இதற்காக அவர் அந்த சோரூம்புக்கு சென்றார். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருபது லட்சம் எலக்ட்ரானிக் காரை பார்த்தார்.

அந்த காருக்குள் சாவியும் இருந்தது. ஏற்கனவே கார் வாங்க வந்த நபர் என்பதால், அங்கு இருந்தவர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை அங்கு நிறுத்தப்பட்ட காரை நைசாக திருடிச் சென்று உள்ளார். உல்லாசமாக வாழ காரை திருடியதாக கூறினார். எனவே அவர் வேறு எங்காவது ? இதுபோன்ற திருடி உள்ளாரா ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினர்.