கோவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் காந்திபுரம் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம் முருகன் மற்றும் கோவை மாநகர் மாவட்ட தலைவர் விவசாய அணி எம்.சிவராமன் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் 80வது வார்டு செயலாளர் நா.தங்கவேலன் முன்னிலையில் பகுதி செயலாளர் வி.ஐ.பதுரூதீன் தலைமையில் கோவை மாநகர் மாவட்டம் பெரியக்கடை வீதி 2 பகுதியில் 80வது வார்டில் கெம்பட்டி காலனி மைதானத்தில் கலைஞர் அவர்களின் திருவுருவ புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொது மக்களுக்கு “பொது சுகாதார குழு தலைவர்” “கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர்” பெ.மாரிசெல்வன் இனிப்புகள் வழங்கினார்.
உடன் துணை செயலாளர் என் ஜே முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.