• Fri. Dec 13th, 2024

புற்றுநோயை கண்டறியும் மேமோ கிராம் கருவி

நாகர்கோவிலில் மாநகராட்சி நிதியிலிருந்து புற்றுநோயை கண்டறியும் மேமோ கிராம் கருவி வாங்க நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் பேட்டியில் தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு கதிர் இயக்கத்தின் வீச்சு இயற்கையாகவே அதிகமாக உள்ள பகுதி என்பது ஒரு இயற்கை அமைப்பு பகுதி என்பது வெள்ளையர் ஆட்சிகாலத்தில் இருந்ததை உணர்ந்த அன்றைக்கே கிறிஸ்தவ மிஷினரி யான தென் இந்திய திருசப்பையின் சார்பில் நெய்யூர் பகுதியில் 150_ஆண்டுகளுக்கு முன்பே, தொலைநோக்கு பார்வையில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டது ஒரு வரலாற்று உண்மை.

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அண்மையில், மேயர் மகேஷ்-யின் ஏற்பாட்டில் நாகர்கோவில் மாநகராட்சியில் பணி புரியும் 934 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில். 42 பேருக்கு மார்பக புற்றுநோய் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய சோதனையை மாநகராட்சி பகுதியில் மட்டுமே அல்ல மாவட்டம் முழுவதும் உள்ள நமது சகோதரிகள், தாய்மார்களுக்கு பரிசோதனை செய்ய. மார்பக புற்றுநோயை கண்டறியும் “மேமோ” கிராம் கருவியை ரூ.20 லட்சத்தில் வாங்கி, அதை மாநகராட்சியின் நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் வைத்து பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது.

மாநகராட்சியின் நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் பெண்களுக்கு சோதனை செய்ய திட்டம் இடப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளிலும் உள்ள பெண்களுக்கு பரிசோதனை செய்தால் இன்னும் ஏராளமான பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து நோயை குணப்படுத்த முடியும். எனவே குமரி மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என துறை சார்ந்த அமைச்சர் மா. சுப்பிரமணியம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு நான் நேரடியாக கடிதம் எழுதியுள்ளேன்.

குமரி மாவட்டத்தில் விரைவில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்ற அவரது நம்பிக்கையை மேயர் மகேஷ் அவரது பிரத்தேகிய பேட்டியில் தெரிவித்தார்.