• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு-சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

ByP.Thangapandi

Apr 19, 2024

உசிலம்பட்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது – வாக்கு செலுத்த வந்த வாக்காளர்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 322 வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் 100 க்கும் மேற்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் உசிலம்பட்டி டி.இ.எல்.சி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள 68 வது வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மாதிரி வாக்குப்பதிவின் போது செயல்பட்ட இயந்திரம், வாக்குப்பதிவை துவங்கும் போது செயல்படாத காரணத்தால் ஒரு ஓட்டுக்கூட பதிவு செய்யப்படாத நிலை ஏற்பட்டது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு வந்து 8 மணிக்கு மேல் வாக்குப்பதிவை துவங்கினர்.

காலை 6:30 மணிக்கே வாக்கு செலுத்த வந்த வாக்களர்கள் சுமார் 1 மணி நேர்த்திற்கும் மேலாக வாக்குச்சாவடி முன்பு காத்திருக்கும் சூழல் உருவானது.