• Fri. Apr 18th, 2025

சாலையோரத்தில் ஆண் சடலம் மீட்பு..,

ByS.Navinsanjai

Apr 14, 2025

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையம்‌ பகுதியில் திருப்பூர் பல்லடம் சாலையோரம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நிர்வாணமாக கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நிர்வாணமாக சாலையோரம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.