• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

விஜய்க்கு அட்வைஸ் சொல்லும் மாளவிகா!

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தார்.

தற்போது, தனுஷ்க்கு ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார்! இந்த படம் விரைவில் OTT- யில் வெளியாக உள்ளது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவார்!

அப்போது ரசிகர் ஒருவர், விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்தால் எந்தமாதிரி படத்தில் நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் காதல் கதை கொண்ட படங்களில் விஜய்யை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சமீப காலமாக அவர் காதல் படங்களில் அவர் நடிக்கவில்லை. விஜய் மீண்டும் ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னோட விருப்பம். அந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசையாக இருக்கிறது என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.