கோவை குனியமுத்தூர் தாஜூல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோவையின் முக்கிய ஜமாத்தில் ஒன்றான குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத்தின் மகாசபை கூட்டம் நடைபெற்றது.
இதில் கடந்த நிர்வாகத்தின் மூன்றாண்டு பணிகள்,வரவு செலவு கணக்குகள் மகாசபையினர் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டு, பொறுப்பில் இருந்து செயல்பட்ட நிர்வாகிகளின் நிறை-குறைகள் குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, ஜமாத்தின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் பெறபட்டு,பொறுப்பில் இருந்த நிர்வாகம் நிறைவுடன் விடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற இரண்டாம் அமர்வு,மகாசபை தலைவர்கள் ஏ.கே.சுல்தான் அமீர்,எம்.எஸ்.அமீது ஆர்.எம்.ரஃபி ஆகியோர் தலைமையில் துவங்கியது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக, முகமது இப்ராஹிம் செயலாளர் அப்பா(எ)அப்துல் ரஹ்மான், பொருளாளர் முஹம்மது பாரூக், முத்தவல்லி-அக்பர் அலி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து புதிய மேனஜராக சுலைமான், ஆடிட்டராக அசனார் ஆகியோர் நியமிக்கபட்டனர். நிகழ்வின் இறுதியாக தேர்வு செய்யபட்ட நிர்வாகிகளுக்கு மகாசபையின் தலைவர்களின் சார்பாக பல்வேறு வழிகாட்டுதழ்கள் வழங்கபட்டு நிர்வாக அடையாளமாக ஆவணங்கள் மினிட் நோட் உட்பட்ட ஜமாத்தின் பொறுப்புகள் ஒப்படைக்கபட்டது.