• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

விக்ரம் நடிப்பில் மகான் -தயாராகிறது

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ திரைப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘மகான்’. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் படம் இந்த மாதம் 26ஆம் தேதி அன்று அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன்பு படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானது
தற்போது படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் மகான் படக்குழுவுடன் ட எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு , “’ ‘மகான்’ படம் தொடர்பான அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்து விட்ட நிலையில் படத்தை உங்களிடம் காண்பிக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். படம் வெளியாவது மற்றும் படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் ” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.