

புத்தாண்டை காதலியுடன் துபாயில் ஜோடியாக கொண்டாடிய விக்னேஷ் சிவன், தற்போது பொங்கல் பண்டிகையை நயன்தாரா, இன்றி தனியாக கொண்டாடி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல்வயப்பட்டார். இந்த காதல் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை நீடித்து வருகிறது.
விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். 2022-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை நயன்தாரா, காதலனுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால், வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார். அண்மையில் புத்தாண்டு கொண்டாட இருவரும் ஜோடியாக துபாய் சென்றிருந்தனர்.புத்தாண்டை காதலியுடன் ஜோடியாக கொண்டாடிய விக்னேஷ் சிவன், தற்போது பொங்கல் பண்டிகையை நயன்தாராவுடன் இணைந்து கொண்டாடவில்லை நிச்சயிக்கப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறவேண்டும் என்கிற வேண்டுதலுடன் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இன்று நடைபெறும் மகரஜோதி பூஜை முடிந்த பின்னரே அவர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது விக்னேஷ் சிவன் திருமண ஆசை நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
