
சின்னியகவுண்டம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக பெருவிழா..
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்னியகவுண்டம்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விநாயகர் மற்றும் மாகாளியம்மன் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் எடுத்துவரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களின் மீது தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.