அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, நாடாளு மன்றத்தில் 3 நாட்களாக கடும் அமளி நிலவியது. இதன் ஒரு பகுதியாக மதுரை யா.ஒத்தக்கடையில் விசிக கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அவர் பதவி விலகவும் வலியுறுத்தினர். யா.ஒத்தக்கடை திருமோகூர் சந்திப்பில் இருந்து மத்திய அரசின் தபால் அலுவலகம் வரை மதுரை கிழக்கு மாவட்ட விசிக சார்பில் பேரணியாக சென்று முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தபால் அலுவலகத்தை முற்றுகை இட்டனர். இதில் போலீசாருக்கும் விசிக நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பெண்போலீசார் பெண் நிர்வாகி மீது சேலையை இழுத்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அமித்ஷாவின் இரண்டு உருவப் பொம்மையை எரித்து கண்டன முழக்கம் இட்டனர். போலீசாருக்கும் விசிக நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கு மாவட்டச் செயலாளர் அரசமுத்து பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செல்ல பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில், கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் ஒத்தக்கடை ஆறுமுகம், மஸ்தான் பட்டி ஆறுமுகம், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.