• Fri. Jan 24th, 2025

மதுரை வில்லாபுரம் சௌடேஸ்வரி அம்மன் ஆலய விழா

ByN.Ravi

May 21, 2024

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவில் 25 ஆம் ஆண்டு கரக உற்சவ விழாவில், கத்தி போடும் விழா நடைபெற்றது. சௌடேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 25 ஆம் ஆண்டு கரக உற்சவ விழா மற்றும் கத்தி போடும் விழா நடைபெற்றது.
விழாவினை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மார்பு மற்றும் முதுகு கைகளில் கத்தியால் அடித்து வைகை ஆற்றில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர், கோவிலில் கத்தி போடும் விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்
கல்யாண விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோயில் வளாகத்தில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..