• Fri. Jun 2nd, 2023

மதுரை: தென் தமிழகஅளவிலான கராத்தே போட்டி!… வென்றவர்களுக்கு பரிசளிப்பு!…

மதுரையில் நடந்த தென் தமிழக அளவிலான 8வது ‘பிரீமியர் லீக்’ கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

சோபுக் காய் கோஜுரியோ கராத்தே பள்ளி சார்பில், தென் தமிழக அளவிலான 8வது ‘பிரீமியர் லீக்’ கராத்தே போட்டிகள் மதுரையில் நடைபெற்றது.

இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்க செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கருணாகரன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

கராத்தே பள்ளியின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் பாக்கியராஜ், பாரத், அங்கு வேல், செந்தில், முத்துராஜா, வினித், பாலகாமராஜன், மாரி, தணிகைவேல், முத்து சூர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *