மதுரையைச் சேர்ந்த பிரபல எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா மரணம் -பக்தர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள வைத்தியநாத பிரதான சாலையின் அருகே உள்ள ஓலைக் குடிசையில் வசித்து வந்தவர் எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா. இவர் அதே பகுதியில் சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் ஓலைக் குடிசையில் எலிகளுடன் வசித்து வந்ததால் அவர் அப்பகுதி மக்களால் எலியன் சித்தர் என அழைக்கப்பட்டு வந்தார். சித்தர் யாரிடமும் பேசாமல் இருப்பவர். சித்தரை கண்டு அவரிடம் அருள் வாக்கு வாங்கி ஆசி பெற வேண்டும் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மக்கள் சித்தரை காண அதிக அளவில் மாலை நேரத்தில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா காலமானார். இது குறித்த தகவல் அறிந்த அவரின் பக்தர்கள் கூடினர். அவருக்கு ஆளுயர மாலைகள் அணிவித்துச் சென்றனர்.இறுதி சடங்கு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்