• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மதுரை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..,

ByKalamegam Viswanathan

May 21, 2025

இந்து முன்னணி சார்பில் ஜூன் 22 மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாரதிய ஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட தலைவர் திரு.ராஜசிம்மன் அவர்கள் தலைமையில் மதுரையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு முருக பக்தர்கள் மாநாட்டில் பெருந்திரளான எண்ணிக்கையில் முருக பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களை பங்கேற்க செய்வதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டினோம்.

இக்கூட்டத்தில் பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் ராமசேகர், முன்னாள் மாவட்ட தலைவர் திரு.சசிராமன், மீனவர் பிரிவு மாநில செயலாளர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் பொறுப்பாளர்கள், மாநாட்டு பொறுப்பாளர்கள், அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.