மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள வேளாண்மை கல்லூரி/ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் மெட்ராஸ் உர நிறுவனம் (Fertilizers) சார்பாக பிஎம் பிரணம் திட்டத்தின் கீழ் கிஷன் சங்கோஷ்டி யின் உரங்களை கையாளுவது பயன்படுத்துவது, சமச்சீர் உர நிர்வாகம் ஒருங்கிணைந்த மண் வள வேளாண்மை குறித்த ஒரு நாள் கருத்தரங்கு மெட்ராஸ் உர நிறுவன மதுரை மண்டல மேலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

கிஷன் விகயன் கேந்திரா திட்ட ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒருங்கிணைந்த மண்வள மேலாண்மை குறித்தும் இடங்களை பயன்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் டிஜிட்டல் வேளாண்மை விரிவுரையாளர் நிர்மலா கலந்து கொண்டு உரங்கள் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் உணவு /ஊட்டச்சத்து அறிவியல் ஜோதிலட்சுமி,மெட்ராஸ் உர நிறுவன துணை மேலாளர் விஜயகுமார் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்