மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர், பெருமாள் கோவில்பட்டி, உத்தப்பநாயக்கணூர், நல்லுத்தேவன்பட்டி, எருமார்பட்டி பகுதியில் உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,
விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு என அனைத்து வரிகளும் உயர்ந்துள்ளது., இது வரை தமிழ்நாட்டில் நடந்ததே இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடைபெறுகிறது.

இன்று திமுக அரசு நெருக்கடியில் இருக்கிறது., அதனால் தான் இன்று மு.க.ஸ்டாலின் நிதி ஆய்வு கூட்டத்திற்கு செல்கிறார், ஒரு முதல்வர் செல்ல வேண்டும், இல்லை என சொல்லவில்லை.
இதே முதலமைச்சர் கடந்த ஆண்டு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார்கள் நான் நிதி ஆய்வு கூட்டத்திற்கு போக மாட்டேன் என வீர வசனம் பேசினார்.
ஆனால் இன்று கடல் கடந்து பறந்து போன தம்பிகளை காப்பாற்றுவதற்காக இன்று நிதி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறேன் என இரட்டை வேடத்தை, நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின், கருணாநிதியின் நாடக கம்பெனிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும், எத்தனை சின்னங்கள் போட்டியிட்டாலும் எடப்பாடியாரை முதல்வர் அரியணையில் அமர்த்த வேண்டும் என்ற உறுதியை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பேசினார்.