• Fri. Apr 19th, 2024

மதுரை கோட்ட ரயில்வே வளர்ச்சி திட்ட பணிகள் ஆலோசனை கூட்டம்…

Byகுமார்

Nov 18, 2021

மதுரை கோட்ட ரயில்வே வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மதுரை கோட்ட ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி பேசுகையில் :

கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் நிறுத்தங்களில் நிறுத்தம் குறைக்கப்பட்டிருந்திருந்தன . இதனால் பல்வேறு தரப்பினரும் சிரமம் அடைந்துவரும் நிலையில் முன்பு இருந்தது போல அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தூத்துக்குடி முதல் சென்னை வரையில் கிழக்கு கடற்கரை சாலையில் ரயில்வே பாதை அமைப்பதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும்,மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கக்கூடிய பல்வேறு ரயில்களிலும் பெட்டிகள் பராமரிப்பு இன்றி உள்ளதாக தொடர்ந்து பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் புதிய ரயில் பெட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் தூத்துக்குடியில் இருந்து கோவை, சென்னைக்கு புதிய ரயில்சேவைகள் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதோடு, மதுரை கோட்டத்தில் புதிய ரயில்பாதைகள், ரயில் சேவைகள் குறித்தும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளோம் என்றார். ரயில்வே பணிகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், மதுரை – தேனி- போடி அகல ரயில்பாதை பணிகள் 6 மாதங்களுக்கு நிறைவடையும் – தேனி எம்.பி.ஓ.பி.ரவிந்திரநாத் பேட்டி.

மதுரையில் நடைபெற்ற மதுரை கோட்ட ரயில்வே வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தேனி எம்.பி.ஓ.பி.ரவிந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :மதுரை – தேனி – போடி அகல ரயில் பாதை பணிகள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என கோட்ட அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர், மதுரையிலிருந்து ஆண்டிப்பட்டி வரையிலான அகல ரயில்பாதையில் ரயில்சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும்,நான் எம்பி ஆன பிறகு மதுரை – தேனி- போடி அகல ரயில் பாதை பணிகளை 75சதவிதம் முடித்து தர மத்திய ரயில்வே அமைச்சர்களை சந்தித்துள்ளேன், மீதியுள்ள பணிகளும் விரைவில் முடித்து விரைவில் மதுரை – தேனி- போடி முதல் சென்னை வரையில் ரயில்களை இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும்,

பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருப்பதி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும், தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கூறினார் மத்திய அரசு மக்களின் கோரிக்கை குறித்து பேச நேரமில்லை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறையினரிடம் மட்டுமே பேசுவார்கள், மதுரை கோட்ட ரயில்வே பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் அதிகாரமற்ற அதிகாரிகளால் சம்ப்ராதயத்திற்காக நடத்தப்பட்டது தான் – கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு.

மதுரை கோட்ட ரயில்வே வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேசுகையில் :

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் எந்த கோரிக்கை குறித்து பேசினாலும் தங்களுக்கு அதிகாரமில்லை என கூறும் அதிகாரமற்ற அதிகாரிகளால் நடத்தப்பட்ட சம்பராதய கூட்டம் என்பதால் எங்களின் எந்த கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை இல்லை எனவும், சிவகங்கை தொகுதியில் நாட்டரசன்கோட்டை, செட்டிநாடு ஆகிய ரயில்வே நிறுத்தங்களில் ரயில் நிறுத்தம் கேட்டுள்ளோம் அதையும் ஏற்கவில்லை, இந்த கூட்டத்தில் பெரும்பலான கோரிக்கையை நிராகரித்துவிட்டனர் , இ-க்யூ பதிவு நடைமுறையை பேக்ஸ்சில் அனுப்பவதிற்கு பதில் இ-மெயிலில் பெறலாம் என்ற கோரிக்கையை மட்டுமே ஏற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் மூலமாக எந்த சலுகையையும் பெறவில்லை. காரைக்குடியில் பிட் லைன் உருவாக்க கேட்டேன் அதனையும் முடியாது என்றார்கள். கடந்த மாதம் அளித்த கோரிக்கைகளுக்கு பதில் அளிக்காமல் ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்கிறோம் என்று மட்டுமே கூறுகின்றனர்.

தொடர்ச்சியாக பேசிய கார்த்தி சிதம்பரம், ரயில்களில் வடநாட்டு உணவுகளே வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் கொரோனா காலகட்டம் முடியும்வரை இந்த உணவு தான் வழங்கப்படும் என்றனர். பொதுமக்களின் கோரிக்கையை எடுத்துரைக்கும் எங்களிடம் மத்தியஅரசு பேசுவதில்லை, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையினரிடமும் மட்டுமே தான் பேசுகின்றனர்.ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் கட்சி பேதமின்றி அனைவரும் கோரிக்கை விடுத்தோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *