மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வல்லவ கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தை எட்டி வல்லவக கணபதி ஆலயத்தை முழுமையாக சீரமைத்து தட்சிணாமூர்த்தி மகாவிஷ்ணு துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் வல்லவ கணபதி பெருமாளுக்கு கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கோவில் கருவறையில் இருந்த வல்லபகணபதி மூலவர் விக்ரகம் எடுத்து மாற்றி வைக்கப்பட்டது. மேலும் துர்க்கை அம்மன்,சரஸ்வதி விமானம், விநாயகர், லட்சுமி விமானம்,பலிபீடம் உள்ளிட்டவைகள் வரைபடம் வரைந்து கும்பங்கள் எடுத்து கார்த்திக் பட்டர் தலைமையில் பாலாலய பூஜை செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருப்பணி குழு தலைவர் ஏடு. ராதாகிருஷ்ண ன் தலைமையில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
