

மதுரை தனியார் அரங்கத்தில் நடைபெற்ற முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 2022 -25ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளாக டவுன் காஜி யார் தலைமையில் தலைவர் எஸ்.ஏ.லியாக்கத்அலி, செயலாளர் ஏ.காஜாமுஹைதீன், பொருளாளர் எஸ் முகமதுபாருக்மைதீன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
நிர்வாகிகள் ராஜ்கபூர், சின்னதம்பி, முன்ஷி, தாஜுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
அதனைத் தொடர்ந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லியாகத்அலி செய்தியாளரிடம் பேசும்போது…
மதுரை மாவட்டம் ஜன்னத்துல் ஐக்கிய ஜமாத் சார்பாக 2022-25ம்ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது இதில் நாங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டோம். சிறுபான்மையினருக்கு ஏற்படக்கூடிய சில சமூக விரோத செயல்களை தடுக்கவும், எங்களது தேவைகளில் முக்கியமான ஒன்று பள்ளிவாசல்களில் மயானம் இல்லாதகுறையை போக்கவும், மதுரையில் பெண்கள் கல்விக்கூடம் ஒன்று கொண்டு வருவோம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மதுரை மக்களை ஒன்றுபடுத்தி சகோதரத்துடன் பழகும் வாய்ப்பை உருவாக்கி நாங்கள் வேறு அவள் அவர்கள் வேறு இல்லை என்ற உணவை உருவாக்கி சகோதரத்துடன் செயல்படுவோம் என கூறினார்.
