• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா

Byp Kumar

May 26, 2023

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், கோவில் மாநகரமாம் மதுரையில் நகரின் மையப்பகுதியில் அமையபெற்றதுமான அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
விழாவையொட்டி முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி பூதேவி வியூக சுந்தர ராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகள் தொடர்ந்து வேதமந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழா துவங்கியதையடுத்து தினமும் பெருமாள் தாயாருடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம்,

அன்ன வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினமும் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது.விழாவின் முத்தாய்ப்பாக வரும் 3.ஆம் தேதி காலையில் திருத்தேரோட்ட வைபவமும், வரும் 5-ம் தேதி தசாவதாரம் நிகழ்வும் நடைபெறுகிறது.கொடியேற்ற விழாவில் மதுரையில் நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொடியேற்ற விழாவிற்கு வந்து இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
‘விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.