• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அஜீத்துக்காக வலிமைகதையில் மாற்றங்கள் செய்யப்பட்டது-வினோத்

வருகின்ற பொங்கல் அன்று அஜீத்குமார் நடிப்பில் வலிமை படம் வெளியாக உள்ளது இந்தப் படத்தின் கதை வேறு நடிகருக்காக எழுதப்பட்டது அதில் தான் அஜீத்குமார் நடித்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது இதனை மறுத்துள்ளார் படத்தின் இயக்குனர் வினோத்

அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் அளித்த பேட்டியில் படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


நாங்கள் இந்தப் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கினோம். அதன் பிறகு தான் கொரோனா பரவல் தொடங்கியது. ஒரு படத்தை எடுப்பதே கடினமானது எனும்போது இந்த சூழல் அதை இரட்டிப்பாக்கியது. ஆனால் எல்லாரும் விரும்பும் ஒரு திரைப்படமாக வலிமை உருவாகியுள்ளது என்று நம்புகிறேன். சமீபத்தில் நான் கொடுத்த பேட்டியில் ‘வலிமை’ கதை வேறொரு நடிகருக்காக எழுதியதாக தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மை அல்ல. நான் இந்த கதையை நீண்ட காலத்துக்கு முன்பு எழுதினேன், அஜித் இந்த படத்துக்குள் வந்த பிறகு, அவருக்கு ஏற்றவாறு நாங்கள் அதை மாற்றினோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.