• Fri. Apr 26th, 2024

காதல் வந்தால் சொல்லியனுப்பு மாணிக்க விநாயகம் காலமானார்

பின்னணிப் பாடகரும் , நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவு காரணமாக 26.12.2021 அன்று மாலை சென்னையில் காலமானார் .


பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமைய்யா பிள்ளை மகன் மாணிக்க விநாயகம் மயிலாடுதுறை சேர்ந்தவர்

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பின்ணணி பாடகர்கள் இருந்தபோதிலும் மறைந்த சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், T.R.மகாலிங்கம் ஆகியோர் குரல்கள் தனித்துவமானது காந்தம் போன்று பாடலை கேட்போரை கட்டிப் போடும் வலிமைமிக்கது அவர்களுக்கு பின் மாணிக்க விநாயகம் சினிமாவில்பாடியது, நடித்தது குறைவு என்றாலும் ஒவ்வொரு பாடலும் காலம் கடந்து மனித மனங்களை கொள்ளகூடிய காந்த குரலுக்கு சொந்தக்காரர் மாணிக்க விநாயகம்

கடந்த 2001-ம் ஆண்டு வெளியான தில் படத்தின் மூலம் மாணிக்க விநாயகம் தமிழ் சினிமாவில் பிண்னணி பாடகராக அறிமுகமானார். விக்ரம் ஜோதிகா நடிப்பில்தரணி இயக்கிய இப்படத்தில் இடம்பெறும் ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ என்கிற பாடலை பாடியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் மாணிக்க விநாயகம்

இதையடுத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அருண்விஜய், ஷாம் நடிப்பில் வெளியான இயற்கை படத்தில் இடம்பெறும்’காதல் வந்தால் சொல்லி அனுப்பு’ என்கிற பாடலும் மாணிக்க விநாயகம் பாடியது தான். காதல் தோல்வியின் வலியை கேட்பவர்களும் உணரும் வண்ணம் தன்னுடைய காந்தகுரலின் மூலம் வலியைகடத்தி இருப்பார் மாணிக்க விநாயகம்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியானகன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய ’விடைகொடு எங்கள் நாடே’ என்கிற பாடல் இன்றளவும் கேட்டால் மனித மனங்களை கலங்க வைத்து, சிலிர்ப்பை ஏற்படுத்தும். இப்பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் உடன் இணைந்து பாடி இருந்தார் மாணிக்க விநாயகம்.

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ரன் படத்தில்‘தேரடி வீதியில்’ என்கிற பாடலை பாடி இருந்தார் மாணிக்க விநாயகம். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் இடம்பெறும் ‘கட்டு கட்டு கீர கட்டு’ என்கிற பாடலை பாடியவரும் மாணிக்க விநாயகம் தான்.

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் இடம்பெறும் ரொமாண்டிக் பாடலான ‘ஐயய்யோ’ பாடல் இவரின் குரல்மூலம் ரசிகர்கள் மனதில் ஓங்கி ஒலித்தது என்றே சொல்லலாம்இதுதவிர ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் இடம்பெறும் ‘கொக்கு பற பற’போன்றுதமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் மாணிக்க விநாயகம் நடிக்க முடியாது என்று மறுத்து வந்தவரை இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இயக்கிய திருடா திருடி படத்தில் நடுத்தர வயதுடைய அப்பாவாக அறிமுகப்படுத்தினார் அவர் நடிகராக அறிமுகமான முதல் படம் தமிழ் சினிமாவில் வணிகரீதியாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய வெற்றிப்படமானது.

அதனை தொடர்ந்துவேட்டைக்காரன், வா. குவாட்டர் கட்டிங் , யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடிகராக நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ பல பாடல்களை பாடி, துன்பமானாலும், துள்ளலானாலும் தனது குரல் வளத்தால் ரசிகர்களுக்கு விருந்தளித்தவர். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *