மதுரை அழகர் கோயில் அருகே தெப்பத்திருவிழாவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த எம்எல்ஏவை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
மதுரை அருகே மேலூரில், இருமுறை சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான். இவர் ,அழகர் கோவில்அருகே ,உள்ள பொய்க்கரைப்பட்டி தெப்பத் திருவிழாவை காண, இருசக்கர வாகனத்தில், தன் குடும்பத்துடன் வந்தார். அவ்வாறு, இருசக்கர வாகனத்தில் வந்த சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான், தெப்பத்திருவிழாவுக்கு, வந்த பக்தர்கள் வே வேடிக்கை பார்த்தனர். பல பக்தர்கள் அவருடைய எளிமையை பாராட்டி ,அவரிடம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அழகர் கோவிலில் ஆண்டு தோறும், மாசி மகத்தன்று பொய்க்கரை பட்டியில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம் .சுந்தர்ராஜ் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் அழகர்கோயில் அருகே உள்ள பொய்க்கரைப்பட்டி தெப்பத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார் .இதை ஏராளமான பக்தர்கள் ,பல கிராமங்களில் இருந்து வந்து தரிசிப்பர். அதேபோன்று, இந்த ஆண்டும், பொய்க்கரை பட்டியில் நடைபெற்ற தெப்ப திருவிழாவை ஏரளமான பக்தர்களை கண்டு தரிசித்தனர். இந்த திருவிழாவை காண, மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான், தன் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிள் வந்தது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.