• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Mar 7, 2023

குடும்ப ஆரோக்கியத்துடன் சேர்த்து வீட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மார்ச் 8-ம் தேதி பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை மகளிர்களுக்கு விருது வழங்கும் விழாவும் மேலும் இல்லத்தரசிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
குறிப்பாக, மாடித்தோட்ட பயிற்சியாளரும் தமிழ்நாடு பாரம்பரிய விதை சேகரிப்பு குழுவைச் சார்ந்தவருமான திருமதி. பிரியா ராஜ்நாராயணன், சிறுதானிய சமையல் மற்றும் சிறுதானிய உணவுப் பொருட்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மண்வாசனை மேனகா மற்றும் தேனீ வளர்ப்பில் பல்வேறு சாதனைகள் புரிந்து இந்திய மற்றும் தமிழக அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள . ஜோஸ்பின் மேரி அவர்களும் நாட்டு மாடுகளை பேணிக் காத்து அதிலிருந்து நிலையான வருமானம் பெற முடியும் என்று சாதித்துக் காட்டிய முனைவர் திருமதி யமுனாதேவி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக வீட்டின் காய்கறி தேவையை வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம் எனும் தலைப்பிலும், சிறுதானியங்களை உண்டால் சிறுவர் போல் சுறுசுறுப்புடன் வாழலாம், ஆயுளைக் கூட்ட ஆளுக்கு ஒரு தேன் பெட்டி என்ற தலைப்பிலும் மற்றும் நலம் தரும் நாட்டு மாடுகளும் 20 வீட்டு உபயோகப் பொருட்களும் எனும் தலைப்புகளிலும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மேலும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.
பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 9442590077, 83000 93777 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.