விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்திற்கு வந்த தமிழக முதல்வர்
மு. க. ஸ்டாலினுக்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் புதன்கிழமை இரவு வரவேற்பு அளித்தனர்.

தென்காசியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சாலை மார்க்கமாக இராஜபாளையம் வழியாக மதுரை சென்றார். புதன்கிழமை இரவு இராஜபாளையத்தில் சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பாக மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா புத்தகம் வழங்கி முதல்வரை வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து எம்எல்ஏ தங்கப்பாண்டியன், எம்பி ராணி ஸ்ரீகுமார், நகராட்சி தலைவர் பவித்ரா ஷ்யாம், சீர்மரபினர் நல வாரிய துணைத்தலைவர் ராசா அருண்மொழி, திமுக தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராம்மூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் சால்வை கொடுத்து முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.







; ?>)
; ?>)
; ?>)
