செப்டம்பர் 3ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தென் மண்டல கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்கிறார்.
மத்திய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிக்காக, மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு குழுவும் கூடி ஆலோசிப்பது வழக்கம். 29ஆவது தென்மண்டல குழு கூட்டம் கடந்தாண்டு திருப்பதியில் நடைபெற்ற நிலையில், 30ஆவது தென்மண்டல குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி, நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3ஆம் தேதி டெல்லி செல்கிறார்.