திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ராமஜெயம் திருச்சி – கல்லணை சாலை திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பல ஆண்டுகள் கிடப்பில் இருந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய தடயமாக மாருதி சுசூகி வெர்ஷா வாகனம் கிடைத்துள்ளது.கொலை சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் அந்த பகுதியில் கார் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த மாருதி சுசுகி வெர்ஷா வாகனம் கொலையாளிகள் பயன்படுத்தியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இது தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழு, 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாருதி சுசுகி வெர்ஷா வாகனத்தின் உரிமையாளர்களின் பட்டியலை சிபிசிஐடி போலீசார் திரட்டி, வாகன உரிமையாளர்களின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக கோவையில் மட்டும் 250க்கும் மேற்பட்ட மாருதி சுசுகி வெர்ஷா உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 1400 கார்களின் உரிமையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு…முக்கிய தடயம் சிக்கியது
