• Fri. Apr 18th, 2025

வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா.,

ByR. Vijay

Apr 12, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முருகன் வழிபாட்டு ஸ்தலங்களில் ஒன்றான இங்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வெள்ளிமயில் வாகனத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி தெய்வானை உடன் முருகப்பெருமானை எழுந்தருளி ஆலய உட் பிரகாரத்தை வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் ரதக்காவடி நடனத்துடன் வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.