• Fri. Apr 18th, 2025

6வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி..,

ByR. Vijay

Apr 12, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றபுனித ஆரோக்கிய மாதாபேராலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் கடந்த மார்ச் 5ந் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.

தவகாலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும்.அதன்படி 6வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர்.இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.